எரிபொருள் விலைச்சூத்திரம் இரத்து செய்யப்படவில்லை

எரிபொருள் விலைச்சூத்திரம் இரத்து செய்யப்படவில்லை - மத்திய வங்கி ஆளுநர்

by Bella Dalima 14-11-2018 | 10:37 PM
Colombo (News 1st) கொள்கை வட்டி வீதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மத்திய வங்கி, வணிக வங்கிகளுக்கு வழங்குகின்ற துணைநில் வைப்பு வசதி 8 வீதம் வரையும், மத்திய வங்கியின் துணைநிலை கடன் வழங்கல் 9 வீதம் வரையும் அதிகரிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் , நேற்று (13) கூடிய மத்திய வங்கியின் நாணய சபை நியதி ஒதுக்கு வீதத்தை 6 வீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, எரிபொருள் விலைச்சூத்திரம் இரத்து செய்யப்படவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். எரிபொருள் விலைச்சூத்திரம் வேறொரு முறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதன் அடிப்படை அம்சங்களுக்கு அமைய எதிர்காலத்தில் விலை தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.