நாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு: சஜித் பிரேமதாச

நாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு: சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

14 Nov, 2018 | 5:30 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நிலையியல் கட்டளைக்கு ஏற்ப ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இன்றைய செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அரசாங்கம் என்று கூறிய குழுவிற்கு இன்று பெரும்பான்மையைக் காண்பிக்க முடியாமற்போனதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் தேர்தல் செயற்பாடு பிற்போடப்படுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச,

பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே எனது எண்ணமாகும். கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு நான் தலைசாய்க்கின்றேன். நான் ஒரு சர்வாதிகாரியல்ல. நான் ஒரு ஜனநாயகவாதி.

என தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்