ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

by Staff Writer 13-11-2018 | 7:17 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கபில சந்திரசேன இதற்கு முன்னர் செயற்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக கபில சந்திரசேன புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.