திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 13-11-2018 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (12), தேசிய மகாவலி அதிகாரசபை மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 02. பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான சட்டமா அதிபரின் விளக்கம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. 03. தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள அமைச்சில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 04. பல்கலைக்கழகத்தில் நிலவும் பேராசிரியர்கள் பற்றாக்குறை, கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து, களனி பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வௌிநாட்டுச் செய்திகள் 01. சவுதி அரேபிய மன்னர் மொஹமட் பின் சல்மான் மற்றும் பிரித்தானிய பிரதமரின் விசேட தூதுவர் சிமொன் மெக் டொனால்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 02. தேசியவாத்தை நிராகரிக்க வேண்டும் என உலகத் தலைவர்களிடம் பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. போர்மியூலா வன் காரோட்டத்தின் இவ்வருடத்துக்கான க்றோன்ப்றீயில், பிரித்தானியாவின் லூவிஸ் ஹமில்டன் (Lewis Hamilton) ஒட்டுமொத்த சம்பியனாகியுள்ளார்.

ஏனைய செய்திகள்