தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சம்பந்தன் ஒரு வழக்கையேனும் தாக்கல் செய்யவில்லை: அனந்தி சசிதரன்

by Staff Writer 13-11-2018 | 10:31 PM
Colombo (News 1st) தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இரா. சம்பந்தன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையாவது தாக்கல் செய்திருந்தால் தான் தனிக்கட்சி அமைத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் குறிப்பிட்டார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் இதனைக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு யாழ்ப்பாணம் - மீசாலை பகுதியில் இன்று இடம்பெற்றது. ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தலைமையில் வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.