லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்தார் லயனல் மெஸ்ஸி

லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்தார் லயனல் மெஸ்ஸி

லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்தார் லயனல் மெஸ்ஸி

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2018 | 7:57 am

லா லீகா கால்பந்தாட்டத்தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதை, பார்சிலோனா கழக அணியின் நட்சத்திர வீரரான லயனல் மெஸ்ஸி (Lionel Messi) சுவீகரித்துள்ளார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஸ்பெய்ன் லா லீகா கால்பந்தாட்டத்தொடரில் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களைக் கௌரவிக்கும் வருடாந்த விருது வழங்கல்விழா ​நேற்றிரவு பார்சிலோனாவில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது.

தொடரில் அதிக கோல்களை போட்ட வீரருக்கான விருதை நட்சத்திர வீரரான லயனல் மெஸ்ஸி சுவீகரித்தார்.

அவர் இந்த விருதை வெற்றிகொள்ளும் ஐந்தாவது சந்தர்ப்பமாக இது பதிவானது.

இதனிடையே, லா லீகா கால்பந்தாட்டத்தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதையும் லயனல் மெஸ்ஸி தனதாக்கிக் கொண்டார்.

கால்பந்தாட்ட அரங்கில் தன்னிகரற்ற வீரராக திகழும் லியனல் மெஸ்ஸி ஆர்ஜென்டின தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

லயனல் மெஸ்ஸி இளவயது முதலே பார்சிலோனா கழக அணிக்காக கழக மட்ட போட்டிகளில் விளையாடி வருகின்றமை இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்