by Staff Writer 12-11-2018 | 10:39 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், நாளை கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை (13) மாலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 341 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.