தேசியவாதத்தை நிராகரிக்க வேண்டும்: மெக்ரோன்

தேசியவாதத்தை நிராகரிக்க வேண்டும்: இமானுவேல் மெக்ரோன்

by Staff Writer 12-11-2018 | 11:33 AM
தேசியவாத்தை நிராகரிக்க வேண்டும் என உலகத் தலைவர்களிடம் பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். 1914 ஆம் ஆண்டிலிருந்து 1918 நவம்பர் 11 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட முதலாம் உலகப் போரின் நூறாவது நிறைவு தினத்தை முன்னிட்ட உலகளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்தகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் அமெரிக்கா, ஜேர்மனி, ரஷ்யா உள்ளிட்ட சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடினர். இதன்போது உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தேசியவாத்தை நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பொது நலனைக் கருத்தில் கொள்ளாது, சுய நலனை மட்டுமே கருதி நடப்பதால் ஒரு தேசத்திற்குரிய மதிப்புமிக்க நடத்தைகளை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.