by Staff Writer 12-11-2018 | 4:57 PM
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் கொழும்பு - வோட் பிளேஸில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வோட் பிளேஸ் பகுதி முழுவதுமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நிலவும் பேராசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி சார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.