பேலியகொட நுழைவாயில், களனி பாலத்திற்கு இடையிலான பகுதி மூடப்படுகிறது

பேலியகொட நுழைவாயில், களனி பாலத்திற்கு இடையிலான பகுதி மூடப்படுகிறது

பேலியகொட நுழைவாயில், களனி பாலத்திற்கு இடையிலான பகுதி மூடப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2018 | 6:57 am

Colombo (News 1st) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயில் மற்றும் களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மீள அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு – கண்டி வீதியின் ஏ ஒன்று பகுதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதியின் ஏ மூன்று பகுதியில் இருந்து அதிவேக வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பெலியகொட நுழைவாயிலின் ஊடாக பிரவேசிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், கொழும்பிலிருந்து களனி பாலத்தின் ஊடாக அதிவேக வீதியின் ஊடாக பெலியகொட நுழைவாயிலின் ஊடாக கொழும்பு – கண்டி வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதிக்கு பயணிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்