விரைவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

விரைவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

விரைவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2018 | 9:53 pm

அநுராதபுரத்தில் இன்று(11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பெருதோட்டத் கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன,விரைவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதன்போது அமைச்சர் தமது நிலைப்பாட்டை பிரதமருடன் கதைத்துள்ளதாக தெரிவித்ததுடன்,தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும், நிதி அமைச்சின் செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பெசில் ராஜபக்ஸ, பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், அமைச்சர் தொண்டமான் ஆகியோருடன் கலந்துரையாடி, முடிந்தளவு விரைவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு செயற்படுவோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்