முன்னாள் சபாநாயகரின் ஊடக அறிக்கை

முன்னாள் சபாநாயகரின் ஊடக அறிக்கை

முன்னாள் சபாநாயகரின் ஊடக அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2018 | 9:42 pm

கரு ஜயசூரிய முன்னாள் சபாநாயகர் என்ற ரீதியில் இன்று பகல் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பலவந்தமாக கையகப்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர் என்ற ரீதியில் கடந்த இரண்டு வாரங்களாக தாம் அவதானித்ததாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மீயுயர் சட்டமான அரசியலமைப்பு தொடர்பில் தமக்கான பொறுப்பு மற்றும் அரச சேவை, பொலிஸ், நீதிமன்ற சுயாதீனம் ஆகியவை தொடர்பான பொறுப்புகளையும் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் முன்னாள் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித சலனமும் இன்றி எந்தவொரு சந்தர்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளை எதிர்நோக்க தான் தயாராகவுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்