சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Nov, 2018 | 6:06 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. பாராளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

02. தேர்தல் தொடர்பில் அச்சமடையப்போவதில்லை என்ற போதிலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்துள்ளன.

03. தமிழ் அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என
தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

04. மக்கள் தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்துவதற்கு சந்தர்ப்பமளிப்பது தலைவர்களின் பொறுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

05. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

06. பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான பொதுத் தேர்தல், 2019 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 150,000க்கும் அதிகமானோர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

02. இலங்கையிலுள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவிற்கு விற்கப்படலாம் எனக் கூறிய பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது என வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்