வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 10-11-2018 | 6:28 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09), பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். 02. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் காணப்பட்ட இடையூறுகள் நீங்கும் என ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 03. தனது தீர்மானம் சரியானதா என, பாராளுமன்றத்தில் அல்ல மக்களிடமே வினவ வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 04. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 05. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு, வௌிநாடு செல்வதற்கு மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 06. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட பொலிஸ் திணைக்களம், தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்தி 01. யேமனில் நிகழும் கடும் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும் ஜனாதிபதி ஆதரவுப் படையினர் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டுச் செய்தி 01. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. அதேநேரம், இந்தப் போட்டியுடன் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.