அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்

by Staff Writer 10-11-2018 | 11:56 AM
Colombo (News 1st) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளின் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.