மேலும் 6 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் 6 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

by Staff Writer 09-11-2018 | 9:03 PM
Colombo (News 1st) மேலும் 6 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதய கம்மன்பில புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். C.B.ரத்நாயக்க தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எஸ்.எம். சந்திரசேன  பெருந்தோட்டத்துறை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். M.L.A.M ஹிஸ்புல்லா நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சராகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தகம், நுகர்வோர் விவகாரம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். மேலும், தொழில் - வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சராக காமினி லொகுகே பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஐனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இதேவேளை, அரச அச்சகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.