இலங்கை தோல்வி; ரங்கன ஹேரத் ஓய்வு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு

by Staff Writer 09-11-2018 | 7:25 PM
Colombo (News 1st)  இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியுடன் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 342 ஓட்டங்களையும் இலங்கை 203 ஓட்டங்களையும் பெற்றதுடன், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இன்னிங்ஸை நிறுத்தியது. வெற்றி இலக்கான 462 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை 4 ஆம் நாளான இன்று 250 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அஞ்சலோ மெத்யூஸ் 53 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மொயின் அலி 4 விக்கெட்களையும் ஜெக் லீச் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதேவேளை, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தனது கடைசி இன்னிங்ஸில் அவர் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்​. சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்ற ரங்கனவுக்கு சக வீரர்களும் எதிரணி வீரர்களும் ரசிகர்களும் பிரியாவிடை அளித்தனர். இதன்போது, ரங்கன ஹேரத்திற்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.