மக்கா சென்று வருமாறு ஒரு பிரிவினரை அனுப்பியுள்ளோம்: எஸ்.பி.திசாநாயக்க

மக்கா சென்று வருமாறு ஒரு பிரிவினரை அனுப்பியுள்ளோம்: எஸ்.பி.திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 7:49 pm

Colombo (News 1st) பெரும்பான்மை தொடர்பில் தமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஆளும் கட்சியின் பிரதம கொரடாவுக்கான கடமைகளை ஆரம்பித்தார்.

இதன்போது,

14 ஆம் திகதிக்கு முன்னர் ஆளுங்கட்சியின் பலத்தை நாட்டிற்கு காண்பிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு 113 பேர் அல்ல 120-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தற்போது அவ்வெண்ணிக்கையைக் காண்பிக்க முடியும் எனினும், அது தமக்கு பயனைத் தராது எனவும் மக்கா சென்று வருமாறு ஒரு பிரிவினரைத் தாம் அனுப்பியுள்ளதாகவும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்