மக்காவில் ரிஷாட் பதியுதீனும் ரவூஃப் ஹக்கீமும் சந்திப்பு

மக்காவில் ரிஷாட் பதியுதீனும் ரவூஃப் ஹக்கீமும் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 7:01 pm

Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

உம்ரா கடமைகளுக்காக சென்ற போது மக்காவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரிக்காது, பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில் இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியைக் குறைப்பதைத் தவிர கூட்டுதற்கு தாம் ஒருபோதும்
உடன்படமாட்டோம் என அதன் தலைவர் மனோ கணேசன் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்