பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 3:30 pm

Colombo (News 1st)  சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அமைச்சுக்களுக்கான துறைகள் அடங்கிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய சிரேஷ்ட செயலணி, கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய ஊடக மத்திய நிலையம் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார்.

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் அதன் கீழ் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன நிதி மற்றும் பொருளாதார அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கி தேசிய பொருளாதார அமைச்சின் கீழ் செயற்பட்டதுடன், ஏனைய அரச வங்கிகள் அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டன.

இதேவேளை, இதற்கு முன்னர் அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்ட ஶ்ரீலங்கா மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்கள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்