பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 4:26 pm

Colombo (News 1st)  பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைப் பிரிவின் தலைமை அதிகாரியின் இணக்கப்பாட்டுடன் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியத் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரோமானிய ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் ஆகியோரும் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் நிலவும் தாமதம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்