கெமரூனில் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு

கெமரூனில் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு

by Chandrasekaram Chandravadani 08-11-2018 | 6:51 AM
மத்திய ஆபிரிக்க நாடான கெமரூனின் வட மேல் பிராந்தியந்தியத்தில் உள்ள பாடாசாலை ஒன்றில் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை, பமேன்டா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து பெண்கள், ஆண்கள் உட்பட 78 மாணவர்கள் மற்றும் வேறு மூவரும் கடத்தப்பட்டனர். சம்பவத்தில், சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மாணவர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் இராணுவ வாககங்களில் கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில், கடத்தல்காரர்களால் சிறந்த முறையில் நடத்தப்பட்டதாக, கடத்தப்பட்டவர்களுள் ஒருவரான 15 வயதான மாணவி ஒருவர், பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். அத்தோடு, பழங்கள், உணவு மற்றும் சூடான நீர் போன்றனவும் வழங்கப்பட்டதாகவும் குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.