by Staff Writer 08-11-2018 | 8:14 PM
Colombo (News 1st) நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் நீதிமன்றத்தை நாட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மறுப்பதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது .
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில், நாட்டின் மீயுயர் நீதிமன்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை எடுத்துச்சென்றால், அது மீண்டும் பாராளுமன்றத்திற்கே அனுப்பப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாக 'த ஹிந்து' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செயற்படத் தாம் விரும்புவதாகவும் அதில் எவ்வித சிக்கல்களும் இல்லை எனவும் அவர் கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைகள் அரசியலமைப்பிற்கு தேவையற்ற ஒன்று என கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன் தமக்கு இணைந்து சேவையாற்ற முடியுமா என்ற கேள்வியை ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படுவது சிறந்த விடயம் என கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு பெரும்பான்மையினரின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.