ஸிம்பாப்வேயில் பஸ் விபத்தில் 47 பேர் பலி

ஸிம்பாப்வேயில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 47 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 08-11-2018 | 10:59 AM
ஸிம்பாப்வேயில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் ஹராரே மற்றும் ரஸாபே (Rusape) நகருக்கும் இடையே இந்த விபத்து சம்பவித்துள்ளது. ஹராரே - முதாரே நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் 47 பேர் உயரிழந்ததைத் தாம் உறுதிப்படுத்துவதாக பொலிஸ் பேச்சாளர் போல் நியாதி தெரிவித்துள்ளார். ஸிம்பாப்வேயில் இவ்வாறான வீதி விபத்துக்கள் இடம்பெறுவது வழமையானதொரு விடயமாகும். கடந்த வருடம் ஜூன் மாதம், கிழக்கு ஆபிரிக்காவின் ஸாம்பியாவிற்கு அண்மையிலுள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 43 ​பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்