புதிய பிரதமருக்கு எதிர்ப்பு: ஐக்கிய தேசியக் கட்சியினர் வாகனப் பேரணி

புதிய பிரதமருக்கு எதிர்ப்பு: ஐக்கிய தேசியக் கட்சியினர் வாகனப் பேரணி

புதிய பிரதமருக்கு எதிர்ப்பு: ஐக்கிய தேசியக் கட்சியினர் வாகனப் பேரணி

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2018 | 8:07 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி இன்று எதிர்ப்பு வாகனப் பேரணியொன்றை முன்னெடுத்தது.

புதிய பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு வலியுறுத்தியும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

காலி முகத்திடலில் பயணத்தை ஆரம்பித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு வாகனப் பேரணி சுதந்திர சதுக்கம் வரை சென்றது.

காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டு வரை வாகனங்களில் பயணித்தவர்கள் அலரி மாளிகைக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

இந்த எதிர்ப்பு வாகனப் பேரணி கொழும்பு மாநகர சபை வளாகத்தில் சென்று சுதந்திர சதுக்கத்தில் பயணத்தை நிறைவு செய்தது.

இதன்போது, காலஞ்சென்ற பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்