ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தோம்

ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவிப்பு

by Bella Dalima 07-11-2018 | 7:34 PM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பாடுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை தமது கட்சி நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி செய்த விடயம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு என சுட்டிக்காட்டியதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கே தமது ஆதரவு என ஜனாதிபதியிடம் தெரிவித்து விட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.