செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 07-11-2018 | 5:54 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால், தற்போதுள்ள அரசாங்கத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதாக கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். 02. கொள்கையைக் கைவிட்டு வசதி வாய்ப்புகளுக்கு விலைபோகக் கூடியவர் தான் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். 03. இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடியினைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றம் விரைவில் கூடும் என எதிர்பார்ப்பதாக பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது. 04. தெரிவுசெய்யப்பட்ட 3 சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 05. தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டிற்குள் உண்மையான, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றினை அடைவது அத்தியாவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 06. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பிரதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. ஆபிரிக்க நாடான கெமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து சுமார் 78 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 02. இந்தியாவின் கர்நாடகாவில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. ஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற சிறப்பை இலங்கை அணியின் சாதனை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் பெற்றார்.