பஸ் கட்டணத்தைக் குறைப்பது குறித்த இறுதித்தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல்

பஸ் கட்டணத்தைக் குறைப்பது குறித்த இறுதித்தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல்

பஸ் கட்டணத்தைக் குறைப்பது குறித்த இறுதித்தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2018 | 7:00 am

Colombo (News 1st) டீசல் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணத்தைக் குறைப்பது குறித்த இறுதித் தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (07) நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் பஸ் உரிமையாளர் சங்க உறுமையாளர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து எடுக்கப்படும் தீர்மானத்தை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 2 வீதத்தினால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை தனியர் பஸ் உரிமையாளர்களின் சம்மேளம் தீர்மானித்துள்ளதாக அதன் பிரதம செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், டீசல் விலை குறைக்கப்பட்டதிலுள்ள இலாபத்தை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்