கம்போடியாவின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி விஜயம்

கம்போடியாவின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி விஜயம்

கம்போடியாவின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி விஜயம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2018 | 6:04 pm

Colombo (News 1st) கம்போடியாவின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி – முகமாலைக்கு இன்று சென்றிருந்தனர்.

கம்போடியாவைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவினர் முகமாலைக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கண்ணிவெடி அபாயம் நிறைந்த நாடாக கம்போடியா காணப்படுகின்றது.

இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த குழுவினர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது, கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பான தௌிவூட்டல்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

தேசிய கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் ஏற்பாட்டில் கம்போடியாவின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்