கேமரூனில் 78 மாணவர்கள் கடத்தல்

கேமரூனில் 78 மாணவர்கள் கடத்தல்

by Bella Dalima 06-11-2018 | 5:48 PM
ஆப்பிரிக்க நாடான கேமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து சுமார் 78 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறைந்தது 78 மாணவர்களும் பாடசாலை தலைமையாசிரியரும் வேறு மூவரும் கடத்தப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் BBC-க்கு தகவல் தெரிவித்துள்ளார். 10 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்ட இச்சம்பவத்திற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை ஆயுதம் தாங்கிய ஆட்கள் திங்கட்கிழமை (05) காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக BBC தகவல் வௌியிட்டுள்ளது. கேமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடாகப் பிரிக்கவேண்டும் என்று கோரிவரும் ஆயுதக்குழுக்கள் பாடசாலைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தன. கேமரூனில் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 20 சதவீதம் இருப்பர்.