கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி

by Bella Dalima 06-11-2018 | 6:39 PM
கர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 3 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஷிமோகா தவிர்ந்த ஏனைய தொகுதிகளை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கைப்பற்றியுள்ளது. 1999 ஆம் ஆண்டின் பின்னர் பெல்லாரி தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. 2.4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக இந்தத் தொகுதியில் தோல்வியடைந்தமை பாரிய பின்னடைவாகக் கருதப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி இடம்பெற்று வருகின்ற நிலையில், நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்தக்கட்சி தோல்வியடைந்துள்ளமை அக்கட்சி மீதான மக்களின் வெறுப்பையே காட்டுவதாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி குறிப்பிட்டுள்ளது.