3 சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தம்

மூன்று சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்படவுள்ளன

by Staff Writer 06-11-2018 | 4:17 PM
Colombo (News  1st) தெரிவு செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மெகசின், கொழும்பு ரிமான்ட், வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் பந்துல ஜயசிங்க கூறினார். கெமராக்கள் பொருத்தப்படும் இடங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருட இறுதிக்குள் கெமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.