மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா

மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா

மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2018 | 6:06 pm

அழகன், ரோஜா படங்களில் நடித்து மிகவும் பிரபலமான மதுபாலா, தற்போது மிரளவைக்கும் அமைச்சராக மாறி இருக்கிறார்.

அழகன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. முதல் படத்திலேயே பலருடைய கவனத்தையும் ஈர்த்த இவர், ‘ரோஜா’ படம் மூலம் மிகவும் பிரபலமாகி விருது பெற்றார்.

இவர் தற்போது அமைச்சர் வேடத்தில் நடித்து வருகிறார்.

‘அக்னி தேவ்’ படத்தில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் அமைச்சராக நடிக்கிறார். இதில் நாயகனாக பாபி சிம்ஹா, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்