பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜிநாமா

பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜிநாமா

by Staff Writer 06-11-2018 | 3:57 PM
Colombo (News 1st)  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பிரதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தான் எதிர்காலத்திலும் செயற்படுவதாக மனுஷ நாணயக்கார ஊடங்களுக்குத் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சாராக மனுஷ நாணயக்கார கடந்த முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். எனினும், தான் பிரதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர் இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, ஏற்கனவே இருந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்படுவதாக சபாநாயகர் வௌியிட்ட நிலைப்பாட்டிற்கு தான் இணங்குவதாகவும் மனுஷ நாணயக்கார அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அரசியலமைப்பிற்கு உட்படாத ஒரு பதவியை தான்னால் வகிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தான், ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள உத்தியோகப்பூர்வ பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்தன் பின்னர் மனுஷ நாணயக்கார அலரி மாளிகைக்கு சென்று ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.