by Staff Writer 06-11-2018 | 3:53 PM
Colombo (News 1st) உடபுசல்லாவ - கல்கொடுவ - கருடகல பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
ராகலயிலிருந்து கொழும்பிற்கு பயணித்த முச்சக்கரவண்டி மீதே நேற்றிரவு (05) மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவர் காயமடைந்ததுடன், அவர்கள் உடபுசல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி 40 மற்றும் 28 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடபுசல்லாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.