எச்சங்களை எந்த நாட்டுக்கு அனுப்புவது - வழக்கு

எச்சங்களை எந்த நாட்டுக்கு அனுப்புவது - வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 05-11-2018 | 4:22 PM

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்காக எந்த நாட்டுக்கு அனுப்புவது என்பது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இமானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார். கடந்த 2013 இல் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் குழாய்களை நிலத்தடியில் பதிக்க முயன்ற நிலையில் மனித எச்சங்கள் கொண்ட புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த புதைகுழியில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் 84 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த மனித எச்சங்களை வெளிநாட்டு நிறுவனத்தின் மூலமாக பகுப்பாய்வு செய்வது தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றின் முன்னாள் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா முன்னிலையில் இடம்பெற்று வந்தது இந்த மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு குற்ற விசாரணை பிரிவு இரு நிறுவனங்களை பரிந்துரைத்திருந்தது. இந்த வழக்கில் மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அகழ்வு செய்யப்பட்ட இவ் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் யாவுமஅனுராதப்புரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.