by Staff Writer 05-11-2018 | 4:04 PM
படையினர் வசமிருந்த மன்னார் மாவட்ட கூட்டுறவு சபையின் மாவட்ட தலைமைக்கடடிடம், இன்று கூட்டுறவு சபை உத்தியோகத்தர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் மன்னார் நுழைவாயில் பகுதியில் இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வுகள் நடைபெற்றன.
மன்னார் தள்ளாடி பிரிகேடியர் செனரத் பண்டார மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த கட்டிடத் தொகுதி சுமார் 28 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.