ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Nov, 2018 | 5:50 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 2018 நவம்பர் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார்.

02. இரண்டு புதிய அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் நேற்று (04), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

03. தற்போதைய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

04. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

05. மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு இன்று (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுச் செய்தி

01. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்