by Staff Writer 04-11-2018 | 9:26 PM
2018 நவம்பர் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூன்று ஒன்று சரத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய ஜனாதிபதி இன்று வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.