இன்றும் 04 பேர் சத்தியப்பிரமாணம் – ஐ.தே.கவிலிருந்தும் ஒருவர் தாவினார்…

இன்றும் 04 பேர் சத்தியப்பிரமாணம் – ஐ.தே.கவிலிருந்தும் ஒருவர் தாவினார்…

இன்றும் 04 பேர் சத்தியப்பிரமாணம் – ஐ.தே.கவிலிருந்தும் ஒருவர் தாவினார்…

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2018 | 8:17 pm

புதிய இரண்டு அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஷ் குணவர்தன இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக கெஹலிய றம்புக்வெல்ல ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த கலாசாரம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்