அத்துரலியே ரத்தன தேரர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

அத்துரலியே ரத்தன தேரர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

அத்துரலியே ரத்தன தேரர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2018 | 11:39 am

Colombo (News1st) தற்போதைய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே தேரர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் தேரர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், புதிய பிரதமருடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என தேரர் தெரிவித்துள்ளார்.

நாடு தொடர்பில் சிந்தித்தே புதிய அரசாங்கத்திறக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் அத்துரலியே ரத்தன தேரரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்