மத்திய மாகாண தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Nov, 2018 | 11:50 am

Colombo (News1st) மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளை பண்டிகையை முன்னிட்டு, நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

மத்திய மாகாண ஆளுநரின் அனுமதிக்கிணங்க, இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்