வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 03-11-2018 | 6:30 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கட்சி மாறுவதற்காக தமக்கு பணம் வழங்கும் முயற்சி இடம்பெற்றதாக பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார். 02. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரசியல் கைதிகளை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 03. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ். வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் கலாசார, எஸ்.பி. நாவின்ன உள்விவகார மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். 04. பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே தமது கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் வேறு எந்த தனிநபருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 05. எதிர்வரும் 7 ஆம் திகதி, பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. எகிப்தின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் பேருந்து ஒன்றின் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 02. கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி அபாயகரமானவர் என சவுதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட நிரல்படுத்தலில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.