எரிபொருள் விலையைக் குறைத்துள்ளது லங்கா IOC

லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையைக் குறைத்துள்ளது

by Staff Writer 02-11-2018 | 9:14 PM
Colombo (News 1st)  இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலையை லங்கா IOC நிறுவனம் குறைத்துள்ளது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 118 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், லங்கா IOC நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் புதிய விலை 153 ரூபாவாகும்.