by Bella Dalima 02-11-2018 | 10:25 PM
எகிப்தின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் எகிப்து உள்ளிட்ட சில நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எகிப்து நாட்டில் மிக அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில், எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்ததாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.