மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய 8 நாடுகளுக்கு அனுமதி

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான அனுமதி 8 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

by Bella Dalima 02-11-2018 | 4:43 PM
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடை அமுல்படுத்தப்பட்ட பின்னரும் ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான அனுமதி 8 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 5 ஆம் திகதி அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட ஈரான் மீதான தடைகள் அமுலுக்கு வந்ததன் பின்னர் எந்த நாடும் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யக்கூடாது என அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. மீறி ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் மீதும் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், குறித்த சில நாடுகள் அமெரிக்காவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அந்நாடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான், இந்தியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஈரானிடமிருந்து அதிகளவிலான எண்ணெய் கொள்வனவு செய்யும் சீனா தமக்கும் இவ்வாறு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சீன அதிகாரிகள் தொடர்ந்தும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.