பருப்பு, கடலை, உழுந்து, சீனி மீதான வரி குறைப்பு

பருப்பு, கடலை, உழுந்து, சீனி மீதான விசேட வர்த்தக வரி குறைப்பு

by Staff Writer 01-11-2018 | 10:17 PM
Colombo (News 1st)  ஒரு கிலோகிராம் பருப்பு மற்றும் கடலை மீதான விசேட வர்த்தக வரி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உழுந்து மீதான வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. கோதுமை மா மீதான தீர்வை வரி சலுகை 6 ரூபாவில் இருந்து 9 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற சீனி மீதான வரியும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படுகின்ற கடன் தொகையை 10,000 ரூபா வரை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 25 வீதமாக இருந்த தொலைத்தொடர்பு வரி 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.