கூட்டுஒப்பந்தம் குறித்த விசேட பேச்சுவார்த்தை இன்று

கூட்டு ஒப்பந்தம் குறித்த விசேட பேச்சுவார்த்தை இன்று

by Staff Writer 01-11-2018 | 7:58 AM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டுஒப்பந்தம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று (01) நடைபெறவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதலாளிமார் சம்மேனளம், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான உடனடிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன். அதற்கமைய, இன்று காலை 11 மணியளவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, செத்சிரிபாயவிலே என்னுடைய தலைமையில் நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தைக்காக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர்கள், கௌரவ ஆறுமுகம் தொண்டமான அமைச்சர் அவர்கள், கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்ற ஏனைய தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ சம்மேளனம், பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழில் அமைச்சின் ஆணையாளர் ஆகியோரையும் அழைத்துள்ளேன். இதில் தீர்க்கமானதொரு இறுதி முடிவை எடுப்பதற்கும் நான் முயற்சி செய்கின்றேன். இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவுகளை மக்களிற்குத் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் தான் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.