by Staff Writer 01-11-2018 | 1:30 PM
Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் உள்ளிட்ட 4 தூதுவர்கள் இன்று முற்பகல் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்தநிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலேனா டிப்லிட்ஸ், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக அகிரா சுகியாமா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராக ஷரிக் லவர்டு மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவராக அஷ்ரப் ஹயிதாரி ஆகியோரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுத்பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.