மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2018 | 8:09 pm

Colombo (News 1st) புதிதாக 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 5 இராஜாங்க அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இன்றிரவு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1. துமிந்த திசாநாயக்க – நீர்பாசனம், நீரியல் வளம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

2. தயாசிறி ஜயசேகர – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

3. பியசேன கமகே – இளைஞர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

4. லக்‌ஷ்மன் செனவிரட்ன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

5. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா- பெருந்தெருக்கள் மற்றும் வீதிஅபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

6. மொஹான் லால் கிரேரு – கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

7. சிரியாணி விஜேவிக்ரம – உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்

8. அங்கஜன் ராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்

9. மனுஷ நாணயக்கார – தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

10. இந்திக பண்டாரநாயக்க – வீடுகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

11. சாரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு பிரதி அமைச்சர்

12. நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர்

13. காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்